மேலும்

நாள்: 11th November 2015

tamil-political-prisoners  (1)

கடும் நிபந்தனைகளுடன் 31 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கியது கொழும்பு நீதிமன்றம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் இன்று பிற்பகல் கொழும்பு  பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

d.m.swaminathan-ms

இரு அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்கவும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் இன்று பதவியேற்றுள்ளனர்.

tamil-prisoners

32 அரசியல் கைதிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் – காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதி

இன்று பிணையில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 32 தமிழ் அரசியல் கைதிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் நீதிமன்றத்துக்கு கிடைக்காததால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

aup raha

இந்தியாவை கட்டுப்படுத்தவே சிறிலங்காவில் முதலீடு செய்கிறது சீனா – இந்திய விமானப்படைத் தளபதி

சிறிலங்காவிலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும், சீனா மேற்கொள்ளும் முதலீடுகள், இந்தியாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நகர்வுகள் என்று இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.

FCID

விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் படைத் தளபதிகளை சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் படைத்தளபதிகள் நால்வரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.

sobitha-last-respect (1)

மரணத்துக்குப் பிந்திய விருப்பம் – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சோபித தேரரின் காணொளி

தனது உடலை தகனம் செய்யாமல், உறுப்புகளை தானம் செய்த பின்னர் புதைக்க வேண்டும் என, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர் வண. மாதுளுவாவே சோபித தேரர் விருப்பம் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tna

நாளை மறுநாள் வடக்கு, கிழக்கில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் – கூட்டமைப்பு ஏற்பாடு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வடக்கு கிழக்கில், நாளை மறுநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

prision

இன்று 31 அரசியல் கைதிகளுக்குப் பிணை – உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட மறுப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 31 தமிழ் அரசியல் கைதிகள் முதற்கட்டமாக இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

ஐ.நா குழுவுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க தடை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட வேண்டாம் என்று, காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களிடம் ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.