மேலும்

நாள்: 3rd November 2015

சீனாவின் உறவு சிறிலங்காவுக்கு முக்கியம் – அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

சீனாவுடன் வலுவான உறவுகளை பேணிக்கொள்வது மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின், நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலை – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

வெளிநாடுகளுக்கு செல்லும் சிறிலங்கா காவல்துறையினருக்கு வருகை நுழைவிசைவு

வெளிநாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் சிறிலங்கா காவல்துறையினருக்கு, அந்தந்த நாடுகளில் வருகை நுழைவிசைவை வழங்கும் வகையில், அனைத்துலக காவல்துறையுடன், சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.

ரவிராஜ் படுகொலை தொடர்பாக ஆறு பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஆறு பேர் மீது சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

படகு வெடிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாலைதீவு இளைஞரை நாடுகடத்தியது சிறிலங்கா

மாலைதீவு அதிபர் பயணம் செய்த படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்தவரை, சிறிலங்கா அரசாங்கம் கொழும்பில் கைது செய்து, மாலைதீவுக்கு நாடு கடத்தியுள்ளது.

பசிலின் மனைவியும் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ச தலைமை தாங்கிய புஷ்பா ராஜபக்ச பவுண்டேசன் நிறுவனத்துக்கு, 3.5 மில்லியன் ரூபாவை அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி அரச வங்கி ஒன்று மாற்றியது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகள் விவகாரம் – மைத்திரி, ரணில், சந்திரிகாவைச் சந்திக்கப் போகிறதாம் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தவாரம் பேச்சு நடத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மைத்திரி, ரணிலுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டரீதியாக வழக்குத் தொடுக்க முடியும் என்று, அறிவித்துள்ள சிறிலங்காவின் பிரதம நீதியரசர் கே.சிறிபவன், அவர் உள்ளிட்ட 75 பேரை அடுத்தமாதம் 15ஆம் நாள் உயர் நீதிமன்றில் முன்னிலையாகவும் பணித்துள்ளார்.