மேலும்

நாள்: 17th November 2015

சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சரின் விரிவான பதில்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த செவ்வியில், முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளி்க்கும் அறிக்கை ஒன்றை  முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

சமந்தா பவரும் சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கையும்

சிறிசேன அரசாங்கத்துடன் அமெரிக்கா தொடர்ந்தும் நல்லுறவைப் பேணவிரும்பினால், போரின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறுமாறும்,  குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அமெரிக்காவினால் அழுத்தம் கொடுக்க முடியாது போகலாம்.

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சியை ஒழிக்கும் அமைச்சரவைப் பத்திரம் நாளை சமர்ப்பிப்பு

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும், புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும், சிறப்பு அமைச்சரவைப் பத்திரத்தை நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனாவின் உயர்மட்ட படை அதிகாரிகள் 32 பேர் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தினர் அரசியல் கைதிகள்

தமது விடுதலைக்காக ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை  மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள், தமது போராட்டத்தை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்ப கூட்டமைப்பு கோரவில்லை- சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு அளித்து விடுவிப்பது தொடர்பான பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிணை வழங்கப்பட்ட ஒருவர் மட்டுமே விடுவிப்பு – எஞ்சியோர் சிறைக்குள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டனர்.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை; புனர்வாழ்வு

அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ய சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பாக, அரசியல் கைதிகள் இன்று தமது முடிவை அறிவிக்கவுள்ளனர்.

“உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”

2009ஆம் ஆண்டு, சூறைகாற்று சுழன்றடித்து, ஈழத் தமிழினத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த தருணத்தில், இதே நாளில் தொடங்கியது இந்தப் பயணம்.