மேலும்

நாள்: 18th November 2015

இந்தியா, சிறிலங்காவுக்கான பயணத்தை தொடங்கினார் சமந்தா பவர் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின்  நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று கூட்டமைப்பை சந்திக்கிறது ஐ.நா குழு – சிறிலங்கா அதிபரிடம் அறிக்கை கையளிக்கிறது

சிறிலங்காவுக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளதுடன், சிறிலங்கா அதிபரைச் சந்தித்து தமது பயணம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.

துறைசார் வல்லுனர் குழுக்களை அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக துறைசார் வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

‘புலிகளின் ஆதரவாளர் சமந்தா பவருக்கு சிறிலங்காவில் என்ன வேலை?’ – கம்மன்பில கேள்வி

அமெரிக்காவிலும், ஐ.நாவிலுமே கடமையைக் கொண்டிருக்கும், சமந்தா பவர் சிறிலங்காவுக்கு வருவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

அரசியல் கைதிகளுக்கான புனர்வாழ்வுக் காலத்தை நீதிமன்றமே தீர்மானிக்கும்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கான புனர்வாழ்வு காலத்தை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து,  இராணுவத்தின் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.