மேலும்

நாள்: 9th November 2015

சர்ச்சையில் சிக்கிய சிறிலங்கா அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகினார்

அவன் கார்ட் சர்ச்சையில் சிக்கிய, சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன பதவியை விட்டு விலகியுள்ளார்.

மாலைதீவில் கைது செய்யப்பட்டவர் கருவாட்டு வியாபாரி?

மாலைதீவு அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர், கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒரு கருவாட்டு வியாபாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று சிறிலங்கா வருகிறது ஐ.நா குழு – ஒத்துழைக்குமாறு அரசிடம் கோருகிறது மன்னிப்புச்சபை

இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று, அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இன்றைய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அனல்பறக்கும்?

அவன் கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று கூட்டப்படவுள்ள சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், அனல் பறக்கும்,  வாக்குவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு வந்தது சோபித தேரரின் உடல் – வரும் 12ஆம் நாள் தேசிய துக்க நாளான பிரகடனம்

சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் காலமான, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய அழைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின் உடல் நேற்றிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொன்சேகா இல்லாவிட்டாலும் போரை வென்றிருப்பேன் – என்கிறார் கோத்தா

பாதுகாப்பு செயலாளராக தான் பதவியில் வகித்திராவிடின், போர் முடிவுக்கு வந்திருக்காது என்றும், சரத் பொன்சேகா இல்லாவிட்டாலும் கூட, தனது தலைமையில் போர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின்  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர் தமிழ் அரசியல் கைதிகள்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, வாக்குறுதி வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள், உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காத நிலையில், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.