மேலும்

நாள்: 19th November 2015

கோத்தாவைப் பாதுகாக்கும் அரசாங்கம் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குமா?

கோத்தபாயவைக் கைதுசெய்வது பொருத்தமற்றது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் நீதி அமைச்சர் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், போர்க் காலத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எவ்வாறு செயற்பட முடியும்?

ஐ.நா குழுவைச் சந்தித்தோருக்கு அச்சுறுத்தல் – சிறிலங்கா அரசு விசாரிக்கும் என்கிறார் மங்கள

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவிடம் சாட்சியமளித்தோர், அச்சுறுத்தப்பட்டதான குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளக முரண்பாடுகளை ஊடகங்களில் பேசும் தருணம் இதுவல்ல – மாவை சேனாதிராசா

உள்ளக முரண்பாடுகள் தொடர்பாக, ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதைக் கைவிடுமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமற்போனோர் குறித்து நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா குழு கோரிக்கை

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக, அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை அறியத்தரும் வகையில், நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாமைக் கண்டுபிடித்ததாக ஐ.நா குழு அறிவிப்பு

திருகோணமலை சிறிலங்கா கடற்படை தளத்தில், இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றைத் தாம் பார்வையிட்டதாகவும், அது தமது பயணத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு எனவும், பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு தெரிவித்துள்ளது.