மேலும்

நாள்: 21st November 2015

8 புலம்பெயர் அமைப்புகள், 269 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது சிறிலங்கா

எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

சமந்தா பவருடன் மங்கள சமரவீர பேச்சு – அனைத்துலக ஆதரவை கோரினார்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அட்மிரல் கரன்னகொடவை கைது செய்ய வேண்டும் – நாடாளுமன்றில் சுமந்திரன்

திருகோணமலைக் கடற்படைத் தள இரகசிய வதைமுகாம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்களை கைது செய்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

திருமலையில் இருப்பது பிரித்தானியர் கால பதுங்குகுழியாம் – கதைவிடுகிறார் அட்மிரல் கரன்னகொட

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இரகசிய வதை முகாம் இருந்ததாக, ஐ.நா நிபுணர் குழு தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட பதுங்குகுழி என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் சமந்தா பவர் – விமான நிலையத்தில் காத்திருந்து வரவேற்றார் மங்கள

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த, சமந்தா பவரை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரவேற்றார்.

அமெரிக்காவின் சொல்லாட்சியை மாற்ற வேண்டிய தருணம் இது – அனைத்துலக ஊடகம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் முன்னுள்ள சவால்கள் தொடர்பாக பவர் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். சிறிலங்காவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திகள் தொடர்பாக பவர் தனது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

சிறிலங்கா கடற்படையுடனான உறவுகளை துண்டிக்க வேண்டும் – அனைத்துலக அமைப்பு கோரிக்கை

சிறிலங்கா கடற்படையின் திருகோணமலை தளத்தில் இரகசிய தடுப்பு முகாமை, ஐ.நா குழு கண்டறிந்துள்ளதையடுத்து, சிறிலங்காவுடனான கடற்படை ஒத்துழைப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்று உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் கோரியுள்ளது.

சிறிலங்காவைக் கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழுவை நியமித்தது நாடுகடந்த தமிழீழ அரசு

சிறிலங்கா – நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து கண்காணிப்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,  அனைத்துலக நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது.

இன்று கொழும்பு வரும் சமந்தா பவர், நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் – கூட்டமைப்புடனும் சந்திப்பு

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மூன்று நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள அவர், நாளை மறுநாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

வரவுசெலவுத் திட்ட அமர்வின் சுவாரசியங்கள்

சிறிலங்காவின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.