மேலும்

நாள்: 4th November 2015

சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், ‘ஒரு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு – சிறிலங்காவுடனான நோர்வேயின் அமைதி ஈடுபாடு’ (To End a Civil War : Norway’s Peace Engagement with Sri Lanka) என்ற நூல், நேற்று முன்தினம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.

குமார் குணரட்ணம் கைது

முன்னிலை சோலிசக் கட்சியைச் சேர்ந்த குமார் குணரட்ணம் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள அங்குருவெல என்ற இடத்தில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையானை டிசம்பர் 10 வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, அடுத்த மாதம் 10ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணாமற்போனோரைத் தேடும் முயற்சியில் ஒரு நம்பிக்கைக் கீற்று – அமந்த பெரேரா

தனது கணவரைக் கடத்திச் சென்ற நபர்கள் சிறிலங்காப் படையினருடன் தொடர்புபட்டவர்கள் என உத்தரை உறுதிபடத் தெரிவித்தார்.மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வரும் வேளையிலேயே உத்தரையின் கணவரும் கடத்தப்பட்டார்.

இந்தியக் கடற்படையுடனான கூட்டுப் பயிற்சி – போர்க்கப்பலில் இருந்து பார்வையிட்ட பாதுகாப்புச்செயலர்

திருகோணமலையில் இந்திய – சிறிலங்கா கடற்படைகள் நடத்திய கூட்டுப் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகள், போர்க்கப்பலில் இருந்து பார்வையிட்டனர்.

ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து ‘காப்பாற்றப்படும்’ சிறிலங்கா கடற்படை அதிகாரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட, சிறிலங்கா கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதது, சட்டத்துறை வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அதிபர் மௌனம் – நாடாளுமன்றில் செல்வம் விசனம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான வாக்குறுதி விடயத்தில் சிறிலங்கா அதிபர் இன்று வரை மௌனம் சாதிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் கட்டம்கட்டமாகவே விடுவிக்கப்படுவர் – விஜேதாச ராஜபக்ச

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரேயடியாகப் பொது மன்னிப்பு அளிக்கப்படாது என்றும், அவர்கள் கட்டம் கட்டமாகவே விடுவிக்கப்படுவர் என்றும், சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.