மேலும்

நாள்: 1st November 2015

பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து சமந்தா பவருடன் விஜேதாச ராஜபக்ச பேச்சு

திறந்த அரசுகளின் கூட்டமைப்பில், சிறிலங்கா இணைந்து கொண்டுள்ளமை, இன்னும் கூடுதலான பொறுப்புக்கூறலை நோக்கிய அதன் இன்னொரு அடி என்று தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர்.

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை இம்மாதம் கையளிப்பு

விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்றும், தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்றும், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மீளாய்வு செய்யப்படுவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்றுடன் முடிகிறது இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்று வந்த கூட்டுப் பயிற்சி இன்று நிறைவடையவுள்ளது. ‘SLINEX 2015’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கூட்டுப் பயிற்சி கடந்த மாதம் 27ஆம் நாள் ஆரம்பமானது.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா- சிறிலங்கா பேச்சு

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அமெரிக்க உயரதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

எத்தகைய அழுக்கு பேரங்களுக்கும் தயாராக இருந்தார் மகிந்த – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்கா அரசுக்குள், தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்க சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தயாராக இருந்தார் என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி நேற்று அக்டோபர்  31 ஆம் நாள் உலக நகரங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யுத்தத்திற்குப்  பின்னரான யாழ்.நகரத்தினை மையப்படுத்திய  இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது.