ரவிராஜ், எக்னெலிகொட படுகொலைகளை மேற்கொண்டது சிறிலங்கா புலனாய்வு பிரிவே- விசாரணையில் உறுதி
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலைகள், சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.