மேலும்

ஒஸ்லோவின் பிரதி நகர முதல்வராகிறார் ஈழத் தமிழ்ப்பெண்

Khamshajiny Gunaratnamநோர்வேயின் ஒஸ்லோ நகரின் பிரதி நகரமுதல்வராக ஈழத் தமிழ்ப் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கம்சி என்று அழைக்கப்படும் இவர், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் முறைப்படி, பிரதி நகரமுதல்வராகத் தெரிவு செய்யப்படுவார்.

சிறிலங்காவில் பிறந்த இவர், மூன்று வயதில் நோர்வேயில் குடியேறினார். தற்போது அவருக்கு வயது 27 ஆகும்.

கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்து ஒஸ்லோ நகரை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நோர்வேயின் தொழிற்கட்சி தலைமையிலான, பசுமை, சோசலிச கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியுள்ளது.

சோசலிச இடதுசாரிக் கட்சியின் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான, மரியன் போகன், ஒஸ்லோ மாநகர முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

அவருக்குக் கீழ், ஹம்சாயினி குணரத்தினம், பிரதி நகரமுதல்வராகப் பணியாற்றவுள்ளார்.

ஹம்சாயினி குணரத்தினம், 2011ஆம் ஆண்டு, நோர்வேயின் உடோயா தீவில் நடந்த தொழிற்கட்சியின் கோடைகால முகாமின் மீது துப்பாக்கி தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில், உயிர் பிழைத்து, நீந்திக் கரையேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 கருத்துகள் “ஒஸ்லோவின் பிரதி நகர முதல்வராகிறார் ஈழத் தமிழ்ப்பெண்”

  1. arni narendran says:

    Congratulations to Ms. Gunaratnam in assuming offfice as a deputy mayor in Oslo. I wish her an enriching tenure in office, in the service of the citizens of this vibrant scandinavian metropolis.

  2. Saroja Sivachandran says:

    congratulations Hamshi. We the Srilankan Tamils Particularly women are proud of you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *