மேலும்

முன்னாள் படைத்தளபதிகளிடம் விசாரணை – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

maithri-முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய சிறிலங்காவின் படைத் தளபதிகள் அண்மையில் பாரிய, மோசடிகள் குறித்த அதிபர் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட, முன்னாள் கடற்படைத் தளபதிகள் அட்மிரல் திசார சமரசிங்க, அட்மிரல் வசந்த கரன்னகொட, முன்னாள் விமானப்படைத் தளபதி எயர்சீவ் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி, ஆகியோர் அண்மையில் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவினால் அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதுகுறித்து,பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,

”நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகாலப் போரின் போது இராணுவத்தினரின் பங்களிப்பு அளப்பரியது.

எனினும் முன்னாள் இராணுவ தளபதிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக நான் அறிந்தேன். உடனடியாக அது தொடர்பில் விசாரித்துப் பார்த்தேன்.

அது வெளிநாட்டு தூதுவர்களாக இருந்த இராணுவ அதிகாரிகள் குறித்த விசாரணை என்று அறிந்து கொண்டேன்.

இவ்வாறு விசாரணைக்கு அழைத்தமை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பாக எனக்கு தெரியப்படுத்தவுமில்லை.

இந்த செயற்பாட்டை நினைத்து நான் வருந்துகின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *