மேலும்

ஐ.நா விசாரணை அறிக்கையில் ஆச்சரியங்கள் இருக்கும்- ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவிப்பு

erik solhaim- zeid raad al huseinசிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத்  தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணை அறிக்கை வரும் செப்ரெம்பர் மாதம், வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தமக்கு உறுதியளித்திருப்பதாகவும், எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

erik solhaim- zeid raad al husein

இந்தப் பதிவுடன் அவர், ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ளார்.

எனினும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எங்கு, எப்போது இந்த வாக்குறுதியை வழங்கினார் என்ற விபரங்கள் எதையும் எரிக் சொல்ஹெய்ம் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *