மேலும்

வடக்கிற்கு விருப்பு வாக்கு முறைமையே சிறந்தது – சுமந்திரன் கருத்து

sumanthiran-colombo-meetதொகுதிவாரி தேர்தல் முறையை விட விகிதாசாரத் தேர்தல் முறை கூடுதல், ஜனநாயகத் தன்மை வாய்ந்தது என்றும், வடக்கைப் பொறுத்தவரையில் விருப்பு வாக்குமுறை சிறந்தது என்றும், கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

தேர்தல் முறை மாற்றத்தின் பாதகங்கள் தொடர்பாக ஆராய, பம்பலப்பிட்டி ஓசன் விடுதியில், நேற்று மாலை சிறுபான்மையின மற்றும் சிறுகட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தப்படுத்துவதற்கு சிறுபான்மையின கட்சிகளின் ஆதரவு அவசியம்.

பிரதான கட்சிகளின் மூலம் மாத்திரம் ஏற்படுத்தப்படும் தேர்தல் முறைமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

எல்லா சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வர முடியும்.

sumanthiran-colombo-meet

தொகுதிவாரி தேர்தல் முறைமையை விட விகிதாசார தேர்தல் முறைமை ஜனநாயகத் தன்மை வாய்ந்தாகும்.

இங்குள்ளவர்களில் அதிகமானவர்கள் விருப்பு வாக்குமுறையை இல்லாதொழிக்க வேண்டும் என கேட்கின்றனர்.

எனினும் அதனை விட விருப்பு வாக்குமுறைமையுடன் இணைந்த விகிதாசார முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

வடக்கிற்கு விருப்பு வாக்குமுறைமையே சிறந்தது” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள்  வெளியிட்ட கருத்துக்கள்-

விக்கிரமபாகு கருணாரத்ன –

விருப்பு வாக்கு முறையை இல்லாமல் செய்து, விகிதாசார தேர்தல் முறையை அமுல்படுத்த வேண்டும்.

சிறிதுங்க ஜெயசூரிய –

விருப்பு வாக்குமுறைமை ஒழிக்கப்பட்டு விகிதாசார முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், பேருவளை மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் இரட்டை தொகுதி முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

அதுரலியே ரத்தன தேரர்-

விகிதாசார முறைமையின் மூலம் சிறுபான்மையின கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

எனவே விகிதாசார முறைமையில் சிறியளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது சிறுபான்மையின கட்சிகளுக்கு நன்மை பயக்கும்.

அத்துடன், விருப்பு வாக்குமுறைமை ஒழிக்கப்படுவது அவசியம்.

விஜித ஹேரத் –

புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படுவதன் மூலம் சுயாதீனமான பொலிஸ் மற்றும் நீதி ஆணைக்குழுக்களை அமைக்க முடியும்.

மக்களுக்கு பூரண  விளக்கம் அளிக்கப்பட்டதன் பின்னரே தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

டியூ குணசேகர-

விக்கிரமபாகு கருணாரத்னவினால் முன்வைக்கப்பட்டுள்ள விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட்டு விகிதாசார முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தினை நான் வரவேற்கின்றேன்.

விருப்பு வாக்கின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவர்களின் மூலம் நாடாளுமன்றத்தின் துாய்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *