மேலும்

எழுத்தாளர் ஜெயகாந்தன், பாடகர் நாகூர் ஹனீபா ஒரே நாளில் மறைவு

jeyakanthan-haneefaபிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனும், பிரபல இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீபாவும், நேற்று சென்னையில் காலமாகினர்.  பிரபல எழுத்தாளரான ஜெயகாந்தன், உடல் நலக்குறைவால் நேற்றிரவு  9 மணியளவில், காலமானார். அவருக்கு வயது 81.

1950ஆம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படம் என்று ஜெயகாந்தன் படைப்புலகில், பரவலான ஈடுபாடு கொண்டிருந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு 2009ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு 9 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மறைந்தார்.

அதேவேளை, பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவும் நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. கடந்த 65 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *