பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 362 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 362 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நேற்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், ‘போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்க காணொளி இன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் திரையிடப்படவுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்ட நால்வர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருக்கும், பாலேந்திரன் ஜெயகுமாரியை சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்யக் கூடும் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால், இடைநிறுத்தப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டைப் பாதுகாப்பதற்கு, சீனா தனது இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
இந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ருவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு, பிரித்தானியாவில் உள்ள செல்வாக்குப் பெற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஆதரவை திரட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது அரசாங்கமும், பிரித்தானியாவின் உதவியைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.
உலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது.