மேலும்

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி

Jeyakumariபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 362 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நெடுங்கேணி காட்டில், சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான கோபிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், பாலேந்திரன் ஜெயகுமாரி சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பூசா தடுப்பு முகாமிலும், பின்னர் வெலிக்கடைச் சிறையிலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரிக்கு எதிராக, சிறிலங்கா காவல்துறையினரால் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், அவரது பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரை நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதித்தது.

அவர் வெளிநாடு செல்லக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

காணாமற்போனோர் சார்பாக நடத்தப்பட்ட போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரியின் கைது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக அளவில் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *