மதுரையில் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கி.பி.அரவிந்தன் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில், வரும் 14ம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணியளவில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.
இரா.திரவியம் தலைமையில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில், கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, ஓவியர் வீர.சந்தனம் உரையாற்றுவார்.
நினைவுரையை எழுத்தாளர்கள் பாமரன் மற்றும் ஜெயப்பிரகாசம், கவிஞர் வைகறை, முனைவர் அரணமுறுவல், சி.அறிவுறுவோன், பொன்மாறன், வழக்கறிஞர்கள் ஜெயம்சூலியஸ், ஜெபராஜ், பொற்கொடி, அகராதி, மற்றும் எஸ்.மைக்கேல் அமல்ராஜ், சி.தர்க்கீகச்செல்வம் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.