மேலும்

மாதம்: February 2015

மார்ச் 2ம் நாள் ஜெனிவா செல்கிறார் மங்கள சமரவீர

சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 2ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா – அதிபர் செயலகம் அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் பொருளாதாரத்தை முன்னேற்ற அனைத்துலக நிதி நிறுவனங்கள், அமெரிக்காவுடன் பேச்சு

சிறிலங்காவின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் ஆகியவற்றின் உதவியை புதிய அரசாங்கம் நாடியுள்ளது.

மோடியின் திட்டத்தை நிராகரித்தார் மைத்திரி

மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன் வைத்த திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

13 பிளஸ் அழுத்தங்களைக் கைவிட்டது இந்தியா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தியா 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும்படி வலியுறுத்தவில்லை என்று, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அடுத்தமாதம் 13ம் நாள் சிறிலங்கா வருகிறார் மோடி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்பதை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

மகிந்தவின் காதுகளைத் திருகிய மோடி – உபுல் ஜோசப் பெர்னான்டோ

இக்கோரிக்கையை சிறிசேன அரசாங்கத்தின் ஊடாக இந்தியா நிறைவேற்றியதன் மூலம், இந்தியாவுக்குப் பாடம் கற்பிக்கலாம் எனக் கருதும் தென்னாசியத் தலைவர்களுக்கு இந்தியா நல்லதொரு பாடத்தைக் கற்பித்துள்ளது.

முன்னைய அரசின் உடன்பாட்டை மதிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் கடமை – சீனா

இன்னொரு நாட்டுடன் முன்னைய அரசாங்கம், செய்து கொண்ட இருதரப்பு உடன்பாட்டை மதிக்க வேண்டியது ஜனநாயக நாடு ஒன்றின் கடப்பாடு என்று சீனா தெரிவித்துள்ளது.

மீண்டும் அரசியலுக்கு வருகிறார் மகிந்த – நுகேகொட கூட்டத்தில் சூளுரை

கடந்த மாதம் அதிபர் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குத் திரும்பப் போவதாக சூளுரைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டத்தினால் சீனாவுடனான உறவை முறிக்க முடியாது – நாடாளுமன்றில் ரணில்

1.5 பில்லியன் டொலர் செலவில் கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்மாணிக்க சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு, அமைச்சரவை அனுமதியின்றி, சட்ட நடைமுறைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.