மகிந்தவின் காதுகளைத் திருகிய மோடி – உபுல் ஜோசப் பெர்னான்டோ
இக்கோரிக்கையை சிறிசேன அரசாங்கத்தின் ஊடாக இந்தியா நிறைவேற்றியதன் மூலம், இந்தியாவுக்குப் பாடம் கற்பிக்கலாம் எனக் கருதும் தென்னாசியத் தலைவர்களுக்கு இந்தியா நல்லதொரு பாடத்தைக் கற்பித்துள்ளது.
இவ்வாறு ‘சிலான் ருடே’ ஆங்கில நாளிதழில், எழுதியுள்ள செய்தி ஆய்வில் ‘உபுல் ஜோசப் பெர்னான்டோ’ குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி’.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது வடக்கு மாகாணத்திற்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியிருந்தார்.
இதன் பின்னர், இந்திய மத்திய அரசாங்கமும் மோடி நிர்வாகமும் ராஜபக்ச அரசாங்கத்திடம் இக்கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரியிருந்த போதிலும் இதனை ராஜபக்ச அரசாங்கம் தட்டிக்கழித்தது.
இதற்கு முன்னர் மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற கையோடு வடக்கு மாகாணத்திற்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு கோரியிருந்தார். ஆனால் ராஜபக்ச அரசாங்கம் தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்க மறுத்துவிட்டது.
ராஜபக்ச பதவியிலிருந்து விலகிய பின்னர், சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னர், மீண்டும் இந்தியா தனது கோரிக்கையை முன்வைத்தது.
இதனைத் தொடர்ந்து அதிபர் சிறிசேன வடக்கு மாகாண ஆளுநராக சிவில் அதிகாரி ஒருவரை நியமித்தார்.
ஆகவே இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ, விக்னேஸ்வரனுக்கோ அல்லது வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்கோ உரித்தான வெற்றியல்ல. இது இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
தற்போது சிறிலங்கா அதிபர் சிறிசேன இந்தியப் பிரதமர் மோடியை வெற்றிப் பெருமிதத்துடன் சந்தித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கென சிவில் ஆளுநர் ஒருவரை நியமிப்பதில் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் இந்தியாவின் கைகளில் இல்லை. இது தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கையை சுட்டிக்காட்டுகிறது.
தனது பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமன்றி இந்தியாவுடன் விரோதத்தை ஏற்படுத்துவதற்காகவும் ராஜபக்ச அரசாங்கம் இக்கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து விட்டது. இந்தியாவின் ஆணைகளுக்குக் கட்டுப்பட தான் தயாராக இல்லை என்பதை ராஜபக்ச அரசாங்கம் காண்பித்தது.
இக்கோரிக்கையை சிறிசேன அரசாங்கத்தின் ஊடாக இந்தியா நிறைவேற்றியதன் மூலம், இந்தியாவுக்குப் பாடம் கற்பிக்கலாம் எனக் கருதும் தென்னாசியத் தலைவர்களுக்கு இந்தியா நல்லதொரு பாடத்தைக் கற்பித்துள்ளது. புதுடில்லியில் மோடி-மைத்திரி சந்திப்பானது இந்தச் செய்தியையே வெளிப்படுத்துகிறது.
இந்தியப் பிரதமராக மோடி பொறுப்பேற்றுக் கொண்டபோது, தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தென்னாசியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்வுக்கு மகிந்தவும் அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்காக மோடி தென்னிந்தியாவின் அழுத்தத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாகியிருந்தார். மோடியின் பதவியேற்பு நிகழ்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தமிழ்நாட்டுத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மகிந்தவால் இந்தியா எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது என்பதை அன்றைய தினம் மோடி நன்கு உணர்ந்திருந்தார்.
எதுஎவ்வாறிருப்பினும், தனது பதவியேற்பு நிகழ்வுக்கு மோடி, மகிந்தவை அழைந்ததுடன், இந்தியா, தமிழ்நாடு மற்றும் சிறிலங்காவுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒத்துழைப்பையும் கோரியிருந்தார். இருப்பினும், மகிந்த தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அசட்டை செய்தார்.
சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பிற்கு அழைத்தன் மூலம் மோடியின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டார் மகிந்த.
மகிந்தவை இந்திய இசைக்கு ஏற்ப நடனம் ஆடச்செய்வதற்காக கரட்கள் சிலவற்றை மோடி வழங்குவதை விட, மகிந்தவுடன் இணைந்து ஆடுவதற்கான துருப்புச் சீட்டுக்களை மோடி கொண்டிருக்கவில்லை.
இந்தியாவின் முன்னைய அரசாங்கத்தின் பலவீனமான வெளியுறவுக் கோட்பாட்டின் காரணமாக இந்திய அரசாங்கத்தால் மகிந்த அரசாங்கம் மீது அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இது மாத்திரமே மோடி அரசாங்கத்திடம் இருந்த துருப்புச் சீட்டாகும்.
அரசாங்கத்தை மோடி பொறுப்பேற்ற போது, ராஜபக்சவின் ‘சீனச் சீட்டின்’ பாதிப்புக்களை இந்தியா சந்திக்க வேண்டியிருந்தது. மீனவர் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்ட போது ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்டதுடன், அதன் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை.
மோடி பதவியேற்றால், உக்ரேயினின் கிறிமியா மீது ரஸ்யா எத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டதோ அதேபோன்ற நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடும் என மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையில் விமர்சனம் செய்திருந்தது தொடர்பாக மார்ச் 26, 2014 அன்று என்னால் எழுதப்பட்ட ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
‘கிறிமியா தொடர்பாக மகிந்த ஏன் கவலை கொள்கிறார்? கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உக்ரெய்ன் விடயம் தொடர்பாக மகிந்த குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னர் இந்தச் செய்தி வெளியிடப்பட்டதற்காக வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மீது மகிந்த தனது கோபத்தைக் காண்பித்திருந்தார்’ என நான் எனது பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
‘புடின் -ஜனுகோவிஜ், மோடி-விக்னேஸ்வரன்’ என்கின்ற தலைப்பில் நான் ‘சிலோன் ருடே’ ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்த விடயமானது ‘இதேபோன்று ரஸ்ய அதிபர் புடின் போன்று சிறிலங்கா விடயத்தில் மோடி தலையீடு செய்வாரா?’ என்கின்ற தலைப்பில் வியாழனன்று வெளியிடப்பட்ட ‘மௌபிம பத்தியில்’ பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிலைப்பாடு தொடர்பாக பீதியடைய வேண்டாம் என அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மகிந்தவுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்திய அரசாங்கமும் கொழும்பு அரசாங்கத்தை மாற்றுவதில் தனது மேலான பணியை ஆற்றியிருந்ததாக இந்திய ஊடகம் தற்போது தெரிவித்துள்ளது.
தென்னாசியாவின் கண்களின் முன்னால் சோனியா காந்தி அரசாங்கத்தால் அழிக்கப்பட்ட இந்தியாவின் பெருமையானது தற்போது மோடியால் மீளவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவை இந்தியா ஒரு ‘மூத்த சகோதரனாக’ நோக்கக்கூடாது எனவும் ஆனால் சிறிலங்காவை இந்தியா ‘இளைய சகோதரி’ போன்று நடத்த வேண்டும் எனவும் முன்னர் ஒரு தடவை மகிந்த ‘The Times of India’ ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
‘இளைய சகோதரி’ இந்தியாவின் ஆசிய எதிரியான சீனாவை ‘தென்னாசிய இல்லத்திற்குள்’ நுழைவதற்கு அனுமதிப்பேன் என பிடிவாதமாக நின்ற போது, இந்தியா தான் சிறிலங்காவின் ‘மூத்த சகோதரன்’ என்பதை உறுதிப்படுத்துவதற்கு, மகிந்தவின் காதுகளை மோடி திருகியுள்ளார்.
இது ஒரு சுத்த முட்டாள் தனமான கட்டுரை என்பதில் எனக்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை. அதென்ன இந்திய கொள்கை ????? மோடி எதை நினைத்தாலும் இலங்கையில் நடத்த முடியுமா ???? முதல் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இந்தியா ஒரு குள்ளனரிதனமான செயற்படை இலங்கை தமிழர்களை வைத்து நடைமுறை படுத்தி வருகிறது … அதற்கு ஒன்றும் தமிழர்கள் மேல் அக்கறை இருந்ததில்லை … அதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஒரு உதாரணம் … நாம் ஒன்றும் இந்தியாவின் பின்புறத்தை நாக்கை கொண்டு நக்க வேண்டியதில்லை … அவர்களை நம்பாமல் இருக்கும் வரை நமக்கு நல்லது … சாட்சி கரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்…நான் சண்டைக்காரன் என்று சொனது நம் சகோதர சிங்களமக்களை தான்…..