மேலும்

ஊவா மாகாணசபை, கோட்டே மாநகரசபைகளில் ஆட்சியைக் காப்பாற்ற போராட்டம்

crossoverகோட்டே மாநகரசபையில் நான்கு உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதால், அங்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோட்டே மாநகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் தனுக விஸ்வஜித் ஏற்கனவே எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவரையடுத்து மேலும் மூன்று மாநகரசபை உறுப்பினர்கள், எதிரணியின் பக்கம் தாவவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டே மாநகரசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, 14 உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகள் தரப்பில் 6 உறுப்பினர்களும் உள்ளனர்.

நான்கு உறுப்பினர்கள், எதிரணியுடன் இணைந்து கொண்டால், இருதரப்பும் சமமான நிலை ஏற்படும்.

இதனால், ஆட்சியைக் காப்பாற்ற ஒரு உறுப்பினரின் ஆதரவைப் பெறுவதற்கு ஆளும்கட்சி கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், கோட்டே மாநகர முதல்வர் ஜனக ரணவக்க நாளை அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே, ஊவா மாகாணசபையின் ஐதேக உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று ஆளும்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

ஊவா மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குறைந்த பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள நிலையில், அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு நிகழலாம் என்பதால், சபை அமர்வுகள் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஊவா மாகாணசபையில் ஆட்சியைக் காப்பாற்றும் தீவிர முயற்சியில், அரசதரப்பு இறங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *