மேலும்

ரஷ்ய நிபுணர்கள் குழுவும் விசாரணைக்கு வருகிறது

plane-crash (1)சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ரஷ்ய நிபுணர்கள் குழுவொன்று இன்று கொழும்பு வரவுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி நேற்று முன்தினம் காலை புறப்பட்ட அன்ரனோவ் 32 விமானம் அத்துருகிரிய பகுதியில் வீழ்ந்து நொருங்கியது.

இந்தச் சம்பவத்தில் விமானி மற்றும் இணைவிமானி உள்ளிட்ட நான்கு சிறிலங்கா விமானப்படையினர் உயிழந்தனர்.

மற்றொரு விமானப்படைச் சிப்பாய் கடுமையான எரிகாயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டார். அவரது இரண்டு கால்களும் முழங்காலுக்குக் கீழேயும், ஒரு கையும், சத்திரசிகிச்சையின் போது அகற்றப்பட்டுள்ளன.

இந்த விமான விபத்துக் குறித்து சிறிலங்கா விமானப்படை உயர்மட்ட விசாரணைகைளை மேற்கொண்டு வருகின்றது.

அதேவேளை, இந்த விசாரணைகளுக்கு உதவ, அன்ரனோவ் விமானங்களைத் தயாரித்த ரஷ்ய நிறுவனத்தின் நிபுணர்கள் குழுவொன்று இன்று கொழும்பு வரவுள்ளது.

இந்தக் குழுவினர் விபத்துக்கான காரணங்களைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் பதிவாகியிருந்த தரவுகளை ஆய்வு செய்யும் பணியை சிறிலங்கா  விமானப்படை மேற்கொள்ளவுள்ளது.

கறுப்புப் பெட்டியின் தரவுகளை ஆய்வு செய்ய முடியாது போனால் உக்ரேனிய நிபுணர்களின் உதவியைப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு சிறிலங்கா விமானப்படையால் உக்ரேனிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த விமானம், ஒன்பது மாதங்களுக்கு முன்னரே மறுசீரமைக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த விபத்தில் பலியான விமானப்படையினரின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *