ஐந்து நாசகாரிகளுடன் நாளை கொழும்பு வருகிறது அமெரிக்காவின் நிமிட்ஸ் விமானந்தாங்கி கப்பல்
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் தலைமையிலான நாசகாரி தாக்குதல் கப்பல்களின் அணி நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் தலைமையிலான நாசகாரி தாக்குதல் கப்பல்களின் அணி நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.
சிறிலங்காவின் 22 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் அவர் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றார்.
சக்தி, துறைமுகங்கள், உட்கட்டமைப்பு துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு சிறிலங்காவுக்கு உதவ கட்டார் இணக்கம் தெரிவித்துள்ளது. கட்டாருக்கான இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் புதிதாக, இராஜாங்கச் செயலர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் நாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பதவியை உருவாக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கொழும்பு துறைமுக நகரத்தை அமைப்பதற்கான, நிலத்தை உருவாக்கும் பணிகள் பாதிக்கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், நிலத்தை உருவாக்கும் பணிகள், 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் சிறிலங்காவின் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இனரீதியாக நாட்டைப் பிரிப்பதை விட, தமிழ் பேசும் அதிபரோ, பிரதமரோ பதவியில் இருப்பது மேல் என்று எலிய அமைப்பைச் சேர்ந்த, வண. மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க முடியாது என சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
போர் வெற்றி வீரர்களை நீதியின் முன் நிறுத்தமாட்டோம் என்று எவரும் கூற முடியாது. போர் வெற்றி வீரர்களை பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதாகும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஸ் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.