ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் ருவன் விஜேவர்த்தன
சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான, ருவன் விஜேவர்த்தன சற்று முன்னர், ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான, ருவன் விஜேவர்த்தன சற்று முன்னர், ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த மகிந்த ராஜபச்ச முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கபொத உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்த 7500 இளைஞர்களுக்கு அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, ஐதேக அரசாங்கம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ள மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் வரும் டிசெம்பர் 07ஆம் நாள் அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதும், அந்தப் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் பயணம், எந்தத் திட்டமும் இன்று மேற்கொள்ளப்பட்டது என்றும், இதனால் அரசாங்கம் பயணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
மூன்று மாகாணசபைகளை கலைத்து ஒரே நாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
முதலில் மாகாணசபைத் தேர்தல்களே நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.