சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது – அல் ஹுசேன்
சிறிலங்கா தொடர்பான தமது பணியகத்தின் விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொடர்பான தமது பணியகத்தின் விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவைக்கு ஐ.தே.க விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதாகவும் இதனால் சிறிலங்கா அதிபரும் அவரது அரசாங்கமும் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மைத்திரிக்கு ஆதரவான குழுவினர் கருதுகின்றனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு, அனைத்துலக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் வல்லுனர்களை உள்ளடக்கிய அனைத்துலக கண்காணிப்புக் குழுவொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமிக்கவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அலரி மாளிகையில், சிறிலங்காவின் முப்படைகளினதும், காவல்துறையினதும் உயர்மட்ட அதிகாரிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் குறித்து கவனிக்க, அனைத்துலக நீதிபதி ஒருவரை ஜப்பான் இந்தமாதம் கொழும்புக்கு அனுப்பவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக தீர்மானத்தை முன்வைப்பது தொடர்பான பேச்சுக்களில், நீதித்துறை பற்றிய கரிசனைகளே அதிகமாக இருந்ததாகவும், சிறிலங்கா படையினர் தொடர்பான கரிசனைகள் அதிகம் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக, விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறைகள் அனைத்தும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன், நம்பகமான நீதிப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தும் வகையில், ஜெனிவாவில் நேற்று அமெரிக்கா சமர்ப்பித்துள்ள புதிய திருத்த வரைவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கோ கிடையாது என்றும், எனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.