துறைமுக நகரத் திட்டம்: சீனாவுக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை – சிறிலங்கா
சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று, சீன அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, சீன அமைச்சரை மேற்கொள்காட்டி வெளியான செய்திகளை சிறிலங்கா நிராகரித்துள்ளது.

