சீனாவுடனான உறவுகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா அமைச்சர் உறுதி
சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.
சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.
சீனா தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. சீனாவுக்கான அவரது பயணத்தைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவைவை விட மைத்திரிபால சிறிசேன தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதை சீனா உணர்ந்துள்ளது.
சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்ட பின்னரும், சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிராந்திய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா, சிறிலங்கா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று, சீனா திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.
தமிழ்நாட்டுடனான வர்த்தக, கலாசார உறவுகளை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறக்க சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய, இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லீ யூசெங், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் உள்ள பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்றும், சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவுடன் இணைந்து வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீளவும் ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் மாத முற்பகுதியில் பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவை சர்வதேச விவகாரங்களில் தலையிட வைக்கும் அல்லது ஈடுபாட்டை உருவாக்கத் தூண்டும் மேலைத்தேய தந்திரோபாயத்தில், சிறீலங்காவின் சிறுபான்மை இனமாக காட்டப்படும் தமிழினமும் சிக்குப்பட வாய்ப்புகள் பல உள்ளன. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.
சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர், மேற்குலக சக்திகள் மற்றும், இந்தியாவுடனான உறவுகளில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சீனாவை சிறிலங்கா இழக்காது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.