மகிந்த அணியில் இருந்து தாவிய சிறியானி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம இன்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம இன்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் நிர்ணயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் – ஈபிஆர்எல்எவ் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிடும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் முயற்சியில் ஈபிஆர்எல்எவ் இறங்கியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு (வர்த்தமானி) எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை விலக்கிக் கொள்ள முறைப்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக மகிந்த அணியினருடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று நடத்திய பேச்சுக்களும் தோல்வியில் முடிந்துள்ளன.
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும், குறித்த மனுக்களை வரும் 30ஆம் நாள் விசாரணைக்கு எடுக்கக் கோரியும், சட்டமா அதிபர் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போடும் சூழல் எழுந்துள்ளமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
நுவரெலிய மாவட்டத்தில் நான்கு புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. அம்பேகமுவ மற்றும் நுவரெலிய பிரதேசசபைகளைப் பிரித்து, புதிதாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளன.