மேலும்

20 கட்சிகளுடன் மகிந்த தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி உருவாக்கம்

mahindaஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் செயற்படும் கூட்டு எதிரணியை கூட்டு பொதுஜன முன்னணி (Joint Podujana Peramuna -JPP),என்ற புதிய அரசியல் கூட்டணியாக உருவாக்க, சிறிலங்கா பொதுஜன முன்னணி முடிவு செய்துள்ளது.

20 அரசியல் கட்சிகள் அடங்கிய இந்தக் கூட்டணி, மலர் மொட்டு சின்னத்தில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் போட்டியிடவுள்ளது.

கூட்டு எதிரணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கூட்டு பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ள இணங்கியுள்ளதாகவும், இதுதொடர்பான உடன்பாடு ஏற்கனவே, கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு பொதுஜன முன்னணியின் முதலாவது பரப்புரைக் கூட்டம் நாளை மறுநாள், பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *