தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு
எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவில் விரைவில் நடக்கவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
உள்ளூராட்சி எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று சிறிலங்காவின் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.
அம்பாந்தோட்டையில் நீதிமன்றத்தின் தடையை மீறி, நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளனர்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான பரப்புரை உத்திகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்தவாரம் கொழும்பில் கலந்துரையாடவுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைச் சமர்ப்பித்தார்.