நடுக்கடலில் 54 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா
இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்ரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய காவல்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

