ஓமந்தையில் விகாரைக்காக சிறிலங்கா காவல்துறை காணி அபகரிக்கத் தடை
வவுனியா- ஓமந்தையில் சிறிலங்கா காவல்துறையினர் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி ஒன்றை அடாத்தாக கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா- ஓமந்தையில் சிறிலங்கா காவல்துறையினர் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி ஒன்றை அடாத்தாக கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
றோயல் கனடிய மவுன்ட் காவல்துறையுடன் சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான திரிவைச்சகுளம் பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 52 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 2,794 பேர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வருவது, ஒரு சவாலான பணி என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து ‘அடுத்த சில நாட்களில்’ முறையான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே, இனியபாரதியும் மற்றொருவரும் கிழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.