அடுத்த சில நாட்களில் பதில் கிடைக்கும் – காத்திருக்கும் சிறிலங்கா
அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து ‘அடுத்த சில நாட்களில்’ முறையான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
ட்ரம்ப் அறிவித்த 44 சதவீத வரிவிதிப்பு திட்டம் தொடர்பாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளையும், இணையவழி கலந்துரையாடல்களையும் நடத்தியது.
அதிகாரிகளின் மட்டத்தில், நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறிலங்காவின் குறிப்பிட்ட விடயங்களில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் போகலாம்.
இதுவரை நடந்த பேச்சுக்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை நல்ல நிலையில் இருப்பதாகவே எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.