எதிரணிக்குத் தாவினார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறிகோத்தாவில் மைத்திரிபால
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். (இரண்டாம் இணைப்பு)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். (இரண்டாம் இணைப்பு)
சிறிலங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சுமார் 500 தாக்குதல்களை பொது பல சேனா அமைப்பு நிகழ்த்தியுள்ளதாக, ஐ.நாவின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் குற்றம்சாட்டியுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நேற்று கௌதம புத்தர் அவதரித்த லும்பினிக்குச் சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.
மாவீரர் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் உள்ள லங்கா சீமெந்து நிறுவனத்தின் 104 ஏக்கர் காணியையும், தொழிற்சாலைக் கட்டடங்களையும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவீகரிக்கவுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 15 தொடக்கம் 20 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி, எதிரணியுடன் இணையவுள்ளதாக, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா கண்காணிப்புக் குழுவை அழைக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை நேபாளத்தைச் சென்றடைந்தார்.
சிறிலங்காவில் எதிரணி அமைக்கவுள்ள புதிய ஆட்சியில், அனைத்துலக அளவில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்றும், புலிகளின் கனவு நிறைவேற ஒருபோதும் விடமாட்டோம் என்றும் நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார் ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
சிறிலங்காவில் சுமார் 73,600 பேர் தமது உரிமைகளை இழந்த நிலையில் அடிமைகளாக இருப்பதாக அனைத்துலக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான பூகோள அடிமைகள் சுட்டியை, Walk Free Foundation வெளியிட்டுள்ளது.