மேலும்

நாள்: 9th November 2026

பயங்கரவாதம் தொடர்பான சட்டமூலத்தை திருத்தியமைக்க கோரும் ஐ.நா நிபுணர்கள்

அனைத்துலக மனித உரிமைகள் சட்டங்களுக்கு இணக்கமாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில்,  பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்தை சிறிலங்கா அரசாங்கம் திருத்தியமைக்க வேண்டும் என ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை திருத்த நடவடிக்கை

நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் இன்று  உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பில் சீனாவின் பயணிகள் ட்ரோன்- சோதனைப் பறப்புகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுக நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் நவம்பர் 11 ஆம் நாள் பயணிகள் ட்ரோன் சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக   சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்கவெல்ல தெரிவித்தார்.

கடல்சார் உரிமைகளை நிலைநாட்ட சிறிலங்கா அரசியல் விருப்பை வெளிப்படுத்த வேண்டும்

சிறிலங்காவின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் வெளிநாட்டு கொடிகளைக் கொண்ட எண்ணெய் தாங்கி கப்பல்கள் அசாதாரணமான முறையில் குவிந்திருப்பது குறித்து, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தலைமை அதிகாரி, றியர் அட்மிரல் வை. என். ஜெயரத்ன கவலை தெரிவித்துள்ளார்.