மேலும்

நாள்: 5th November 2026

தடுப்புக் காவல் காலத்தை 48 மணி நேரமாகக் குறைக்கத் தயார்- சிறிலங்கா அதிபர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டத்தில்,  முன்மொழியப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கான  தடுப்புக் காவல் காலம் 72 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்று  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சிறிலங்கா விமானப்படைக்கு இஸ்ரேலிடம் இருந்து 4 ட்ரோன்கள் கொள்வனவு

சிறிலங்கா விமானப்படைக்காக, இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து நான்கு ட்ரோன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.

திட்டமிட்டகுற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்- ஐ.நா வல்லுநர்கள் கவலை

சிறிலங்காவினால் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் உள்ள சில விதிகள் குறித்து ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் தேசிய வறுமைக்கோட்டு எல்லை 17,742 ரூபாவாக அதிகரிப்பு.

சிறிலங்காவின் அதிகாரப்பூர்வ தேசிய வறுமைக் கோடு, செப்ரெம்பர் மாதத்தில், ஒரு நபருக்கு மாதத்திற்கு 17,742 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா படைகளில் இருந்து படையினர் வெளியேறும் போக்கு அதிகரிப்பு

சிறிலங்கா பாதுகாப்புப் படைகளில் பணியாற்றுபவர்கள் அதிகளவில் சேவையிலிருந்து வெளியேறும் போக்கு காணப்படுவதாக, சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது- சரத் என் சில்வா

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா, எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படைக்கு மேலதிகமாக 4,261 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சிறிலங்கா விமானப்படைக்கு ஆளில்லா விமான அமைப்பை (ட்ரோன்)  நிறுவுவதற்கு 4,261 மில்லியன் ரூபாவை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வது குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.

சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க தொடங்கியது உயர்நீதிமன்றம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையைச் சவாலுக்குட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட 26 சிறப்புத் தீர்மான மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்று தொடங்கியது.