மேலும்

பிரிவு: செய்திகள்

முக்காற் பங்கு போரை வென்றது நானே – மார்தட்டுகிறார் சந்திரிகா

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரின் முக்காற் பங்கைத் தானே வெற்றி கொண்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

நாடாளுமன்ற ஆசனத்தை ஏற்க அமீர் அலி முடிவு – மகிந்தவின் வலையில் வீழ்ந்தார் ரிசாத்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.

பந்துல குணவர்த்தன எதிரணிக்கு தாவலாம்? – திடீரென வெளிநாடு சென்றதால் ஆளும்கட்சி அதிர்ச்சி

சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, திடீரென வெளிநாடு ஒன்றுக்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடு திரும்பியதும் அவர் அரசியல் ரீதியிலான முடிவொன்றை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

கொக்குத்தொடுவாயில் காணிகளை அபகரிக்கும் சிறிலங்கா அமைச்சர்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சிறிலங்காவின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் உறவினர்கள் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை

வடக்கு மாகாணசபையின் அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மகிந்தவைப் பாதுகாக்கும் மைத்திரி – கருத்துக்கூற மறுக்கிறது கூட்டமைப்பு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பாதுகாப்பேன் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட மறுத்துள்ளது.

புலிகளின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் நெடியவன் கைது

திருகோணமலை, சாம்பல்தீவில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

தேர்தலைக் கண்காணிக்க மூன்று அனைத்துலக அமைப்புகளுக்கு அழைப்பு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மூன்று அனைத்துலக கண்காணிப்புக் குழுக்களுக்கு சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

அமைச்சரவை மாற்றம், வரவுசெலவுத் திட்டம்: பரபரப்பான சூழலில் கூடுகிறது வடக்கு மாகாணசபை

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலும் – அமைச்சரவைப் பொறுப்புக்களில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பேசப்படுகின்ற நிலையிலும் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது.

“ஜனவரி 8க்குப் பின்னரும் நானே சிறிலங்கா அதிபர்” – என்கிறார் மகிந்த

வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னரும் தானே சிறிலங்கா அதிபராகத் தொடர்ந்து நீடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.