ஐ.நா விசாரணைகள் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து அதிருப்தி வெளியிட்டார் பீரிஸ்
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
குறுகிய அரசியல் நலன்களுக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம்தள்ளி விட்டு, சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் மூலம், சிறிலங்கா ஆபத்தையே விலைகொடுத்த வாங்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.
கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அடுத்த மாத துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருவது உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில், சீனக் கடற்படையின் செயற்பாடுகளை இந்தியக் கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவன் தெரிவித்துள்ளார்.
மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ரஸ்யக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று நான்கு நாள் பயணமாக இந்த மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட காணிகளின் விபரத்தைத் திரட்டுவதற்காக, வடக்கு மாகாணத்தில், உள்ள காணிகள் தொடர்பான விபரங்களை வடக்கு மாகாணசபை சேகரித்து வருகிறது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.