மேலும்

பிரிவு: செய்திகள்

கடந்த மாதம் 2 பயணிகளே வருகை – மூடப்படுகிறது மகிந்தவின் மத்தல விமான நிலையம்

மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளார் மைத்திரி

மூன்று நாள் பயணமாக நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, லண்டனில், புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அபிலாசைகளை நிறைவேற்றும் உரிமை தமிழர்களுக்கு இருக்க வேண்டும் – சுஸ்மாவிடம் சம்பந்தன்

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான இறுதி அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதாக சீன நிறுவனம் அறிவிப்பு

கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை இடைநிறுத்துவதாக அதன் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரன் மீது ரணில் சீற்றம்

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக, வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மோடி வருகையால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் உரையாற்றவுள்ளதால், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்துள்ளார்.

சுஸ்மாவுக்கு இராப்போசன விருந்தளித்தார் மங்கள – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு

இரண்டுநாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.

வடபகுதி மீனவர்களின் பிரச்சினை குறித்து சுஸ்மாவுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களின் போது, வடபகுதியில் உள்ள மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அனைத்துலக அரங்கில் இந்தியாவின் ஆதரவு தேவை – சுஸ்மாவிடம் கோரினார் மைத்திரி

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,  நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிப்போம் – சீனா

கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தை சிறிலங்கா  பொருத்தமான முறையில் தீர்க்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.