எதிரணிக்குப் பாய்ந்தார் ஹிருணிகா
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, எதிரணியுடன் இணைந்து, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, எதிரணியுடன் இணைந்து, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்.
இறுதிக்கட்டப் போருக்கு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுத்தது தாமே என்ற ஜாதிக ஹெல உறுமயவின் உரிமை கோரலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்தை பிற்போடுமாறு சில கத்தோலிக்க மதகுருக்களும், சாதாரண மக்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சரத் பொன்சேகா ஆதரவு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியுள்ள எதிரணியின் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, போர்க்குற்றங்களை இழைத்ததாக, தென்னாபிரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரியவுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புகள் குறித்து தான் கூறியதை ஊடகங்கள் தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதாக குத்துக்கரணம் அடித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பாதுகாப்பேன் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட மறுத்துள்ளது.