மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பல்கலைக்கழகங்களில் மெய்நிகர் முறையில் விரிவுரைகளை நடத்த உத்தரவு

பல்கலைக்கழக விரிவுரைகளை மெய்நிகர் முறையில் முன்னெடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா?

மின்சாரம் விநியோகத்தில் இதுவரை எந்தப் பிரச்சினைகளும் கண்டறியப்படவில்லை என்று எரிசக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்படும்

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ அறிவித்துள்ளார்.

அரச பணியகங்கள், பாடசாலைகளை புதன்கிழமைகளில் மூட சிறிலங்கா அரசு உத்தரவு

எரிபொருள்  நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில், அரச பணியகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை- ஆராயுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவு

எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, அரச, தனியார் துறை பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயுமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

16 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்பிய ‘லங்கா ஈ நியூஸ்’ ஆசிரியர் கைது

16 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பிய லங்கா ஈ நியூஸ் இணையத் தள ஆசிரியர்  சந்தருவன் சேனாதீர கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடுகிறது பிரிட்ஜோப் நான்சென்

ஐ.நாவின் கொடியுடனான R/V டொக்டர் பிரிட்ஜோப் நான்சென் ( Dr. Fridtjof Nansen) ஆய்வுக் கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடவுள்ளது.

அமைச்சர் குமார ஜயக்கொடியை பதவி நீக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால்,  அவரை பதவியில் இருந்து நீக்குமாறு, இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தி அமைப்பு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம், கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய மாலுமிகளின் சடலங்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படும்

சிறிலங்கா அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கடற்படைக் கப்பல்  மூழ்கடிக்கப்பட்டதில், கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

பயணங்களையும், எரிபொருள் கொள்வனவையும் குறைக்குமாறு வேண்டுகோள்

மத்திய கிழக்கு மோதல்களால் எழும் எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.