ஈரானிய மாலுமிகளின் சடலங்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படும்
சிறிலங்கா அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
சிறிலங்கா அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல்களால் எழும் எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகளாவிய ரீதியாக எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்துள்ள போதும், சிறிலங்காவில் எரிபொருள் விலைகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விடக் குறைவாகவே இருப்பதாக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சிறிலங்கா நடுநிலை மற்றும் அணிசேரா கொள்கைளை பின்பற்றி வருவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படையால் மீட்கப்பட்ட 230 ஈரானிய கடற்படையினருக்கும், 30 நாள் நுழைவிசைவு வழங்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாம் விரும்பாத ஒன்றாக இருந்தாலும், நாடு போர்க்காலம் போன்ற ஒரு சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.