மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

எரிபொருள் விலைகள் நள்ளிரவில் கடுமையாக அதிகரிப்பு

அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்குள்  இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகளை சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல்  இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்கா எதிர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக அமைப்பும் விசாரணை நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மகிந்த, நாமலுக்கு எதிராக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் – கபில சந்திரசேன குத்துக்கரணம்

சிறிலங்கன் எயர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிடம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, அச்சுறுத்தலின் பேரில் வாக்குமூலம் பெற்றதாக,  அவரது சட்டவாளர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியை  தாக்கல் செய்துள்ளனர்.

எரிபொருளை களஞ்சியப்படுத்த போதிய வசதியில்லை

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் எரிபொருள் சேமிப்புத் திறனை மேம்படுத்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி செர்ஜியோ கோர் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோர், இன்று காலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் செர்ஜியோ கோர் இன்று சிறிலங்கா பயணம்

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், இன்று முதல் சிறிலங்கா மற்றும் மாலைதீவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எரிபொருள் விலைகள் 10 வீதம் வரை உயரும்?

சிறிலங்காவில் எரிபொருள்களின் விலைகள் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் உயரக் கூடும் என சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதிகரிக்கும் எரிசக்தி நெருக்கடி – விரைவில் மின்வெட்டும் நடைமுறைக்கு வரும்

தரமற்ற நிலக்கரி மற்றும் தடைப்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதியினால், சிறிலங்காவில்  மின் உற்பத்தி கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால்  நீண்டகால மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர்.

சிறிலங்காவிடம் உள்ள எரிபொருள் கையிருப்பு- வெளியிட்டார் குமார ஜயக்கொடி

சிறிலங்காவில் எரிபொருள் கையிருப்பு  தொடர்பாக,  எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்றத்தில்  ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.

இலஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் கோட்டா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  கோட்டாபய ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன்பாக, இன்று முன்னிலையாகியுள்ளார்.