மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயங்களை அகற்றியிருந்தால் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம் – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகள் கோரியது போன்று பேச்சுவார்த்தைக் காலத்தில் யாழ்ப்பாண உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றியிருந்தால், மாவிலாறில் போர் வெடித்து இரண்டே வாரங்களில் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் சிறிலங்காவின் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்காவின் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மகிந்தவுடன் நெருக்கத்தை பேணவில்லை – குற்றச்சாட்டை மறுக்கிறார் கமலேஷ் சர்மா

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணி வந்ததாகவும், மகிந்த அரசின் மனித உரிமை மீறல்களைக்  கண்டுகொள்ளாமல் செயற்பட்டதாகவும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளார்.

புதிய காவல்துறைமா அதிபராகிறார் மகிந்தவின் முன்னாள் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர், எஸ்.எம்.விக்கிரமதுங்க, சிறிலங்காவின் அடுத்த காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்சவின் மைத்துனர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மைத்துனர் திஸ்ஸ குணதிலகவை  நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர்களின் மாநாட்டில் இருந்து நழுவினார் விக்கி

ஹிக்கடுவையில் நேற்று நடந்த மாகாண முதலமைச்சர்களின் 32 ஆவது மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.

கொழும்பில் அமெரிக்க கடற்படை வாத்திய அணியின் இசை நிகழ்ச்சிகள்

சிறிலங்காவில் பொது இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியின் வாத்திய அணி கொழும்புக்கு வந்துள்ளது.

சிறிலங்காவின் வரலாற்று எதிரி இந்தியா – உதய கம்மன்பில

சிறிலங்காவின் வரலாற்று எதிரி நாடான இந்தியாவுடன், எட்கா உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், இந்தியாவின் ஒரு மாநிலமாகவே சிறிலங்கா மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.

மூடப்பட்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீளத்திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்

நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர், கடந்த ஆண்டு மூடப்பட்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீள இயக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.