மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

காணாமல்போனோர் பணியக திருத்தச்சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது

காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் செயற்பாடுகளை நீக்குதல் தொடர்பான திருத்தச்சட்டம் நேற்று சி்றிலங்கா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

11 தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கில் மற்றொரு சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார் ஞானசார தேரர்

கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மறைந்திருந்த பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று வெளியே வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள்

பிரெஞ்சு கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

பூகோள அமைதிச் சுட்டி- தரவரிசையில் சிறிலங்கா பெரும் பாய்ச்சல்

பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் உலகின் அமைதியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா 17 இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளது.

வடக்கு மாகாண அவைத் தலைவருக்கு சோழர் கால அரசர்களைப் போன்ற சிம்மாசனம்

வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருக்காக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்புக்கான நடவடிக்கையை திருகோணமலையில் தொடங்குகிறார் மகிந்த

ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு, கூட்டு எதிரணியைப் பலப்படுத்தும், பரப்புரைகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் தொடங்கவுள்ளார்.

மகிந்த, உதயங்கவைச் சந்தித்த பிரதியமைச்சரிடம் விளக்கம் கோர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவிடம் விளக்கம் கோருவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தி குறித்து மகிந்த சமரசிங்கவுடன் இந்தியத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவின் துறைமுகங்கள், மற்றும் கப்பல் முறையை அபிவிருத்தி செய்வதில் இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பாக கொழும்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் – சீனாவுடன் இன்னமும் உடன்பாடு இல்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் விடயத்தில், சீன நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.