மேலும்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிராக வடக்கு, கிழக்கில் கண்டனப் போராட்டங்கள்

யாழ்ப்பாணம், நல்லூரில் தியாக தீபம் திலீபன்  உருவச்சிலை சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்டதைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீளவும் உரிய இடத்தில் உடனடியாக வைக்கக் கோரியும், வடக்கு, கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தக் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகி இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் திலீபன் நினைவிடம் முன்பாகவும், திருகோணமலையில் சிவன் கோவிலடியிலும், கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியிலும், அம்பாறையில் தம்பிலுவில் மத்திய சந்தையடியிலும், மன்னாரில் தந்தை செல்வா நினைவுத்தூபியடியிலும், வவுனியாவில் பொங்குதமிழ் நினைவுத் தூபியடியிலும், முல்லைத்தீவில் மாங்குளத்திலும், மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டங்களில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *