மேலும்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்றார் எரிக் மேயர்,

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர், அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வொசிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற விழாவில், அவர் சிறிலங்காவுக்கான தூதுவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள,  கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகக் குழுவினர் அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கூட்டாண்மையை ஆழப்படுத்தவும், எமது பொதுவான நலன்களையும் முன்னுரிமைகளையும் முன்னெடுத்துச் செல்லவும் அவரது தலைமையின் கீழ் பணியாற்ற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்  என்றும் கூறியுள்ளது.

எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் விரிவான அனுபவம் கொண்ட ஒரு மூத்த வெளிநாட்டு சேவை அதிகாரி ஆவார்.

சிறிலங்காவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் மூத்த பணியக அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *