ரில்வின் சில்வாவைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா
ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மற்றும் சிறிலங்கா இடையேயான அண்மைய சந்திப்புகள் மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியா-சிறிலங்கா உறவுகளின் பல்வேறு அம்சங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவருக்கு விளக்கியதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

