மேலும்

மாதம்: October 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை திரும்ப பெற வேண்டும்

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் பிற உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம்  தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து ஐ.நா கடும் கவலை

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் (PSTA) சட்டமூலம் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் (OHCHR) கடும் கவலைகளை எழுப்பியுள்ளது.

ரில்வின் சில்வாவை சந்தித்தார் இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்து, இந்தியா மற்றும் சிறிலங்கா இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

ஆயுதப் படைகளுக்குக் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது ஆபத்து

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் மூலம், ஆயுதப் படைகளுக்குக் காவல்துறை அதிகாரங்களை வழங்க தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்,  எச்சரித்துள்ளார்.

2030இல் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், 10 பில்லியன் டொலர் வருவாய் இலக்கு

2030-ஆம் ஆண்டிற்குள் சிறிலங்காவுக்கு 10 பில்லியன் டொலர் சுற்றுலா வருவாயை ஈட்டுவது மற்றும் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது ஆகிய இலக்குகளை அடைவது தொடர்பாக நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில்  கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு சிறை வன்முறை- சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 5, மற்றும் 6 ஆம் நாள்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த தனது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு , வெளியிட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக இடம்பிடித்துள்ள கொழும்பு

கொழும்புத் துறைமுகம், அமெரிக்க வணிகங்களை தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள சந்தைகளுடன் இணைத்து, உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக இடம்பிடித்துள்ளது என அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து சிறிலங்கா பிரதமருடன் அமெரிக்க தூதுவர் ஆலோசனை

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக,  அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்,  நேற்று சிறிலங்கா பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார்.

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

எயர் பஸ் விமான கொள்முதலின் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, 24 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமூலத்தை திரும்பப் பெற கோருகிறது அனைத்துலக மன்னிப்புச் சபை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு, சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனைத்துலக மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.