மேலும்

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

எயர் பஸ் விமான கொள்முதலின் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, 24 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் அசங்க போதாரகமவிடம் இதனைத் தெரிவித்தது.

ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, 59 சாட்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்களை உள்ளடக்கிய இந்த குற்றப்பத்திரிகை, நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கமைய, சந்தேகநபரான நாமல் ராஜபக்சவை இன்று குறித்த நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வின் முன் நிறுத்துமாறு கொழும்பு பிரதம நீதிவான் அசங்க போதாரகம உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *